கருணை மழை பொழியும் கற்பகம் கருகாவூரில் வாழும் அற்புதல் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய நாயன்மார்களுள் திருஞான சம்பந்தர் (ம) மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க பிரார்த்தனை ஸ்தலமாகும். இத் திருக்கோயிலில் சுவாமி, விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவ தில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தி வழிபடுவதே சிறப்பு. குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும், கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது. அம்பாள் பெயர் கருகாத்த நாயகி வடமொழியில் கர்ப்பரக்ஷ்சாம்பிகை. இத்திருக்கோயில் அம்பாள் சந்நியில் நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள்...
05:30 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 08:00 PM IST | |
12:30 PM IST - 04:00 PM IST | |
இத்திருக்கோயில் நடை அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதம் மட்டும் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும் மீண்டும் 4.00 மணிக்கு திறக்கப்பட்டு 8.00 மணிக்கு மூடப்படும். |