Screen Reader Access     A-AA+
அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302, தஞ்சாவூர் .
Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302, Thanjavur District [TM014056]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு முல்லைவனநாத சுவாமி சிறப்பு அருள்மிகு முல்லைவனநாதர் சுயம்பு லிங்கமாகும். லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. லிங்கத் திருமேனியில் முல்லைக் கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியான மூலவர் முல்லை வனநாதருக்கு புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால் தீராத நோய்களும், தீராத தோஷங்களும் குறிப்பாக சருமம் சம்பந்தமான நோய்கள், புத்திர தோஷம் நிவர்த்தியாகும். அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சிறப்பு முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற...

தல பெருமை

முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற முல்லை வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவன், இறைவியை வேண்டினால் குழந்தை பேறு கிடைக்குமென உபதேசித்தனர். நித்துருவரும், வேதிகையும் இறைவன், இறைவியை வணங்கினர். அதனால் மன மகிழ்ந்த மக்கட் பேறு உண்டாயிற்று.வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் சுய நினை விழந்து மயக்கமுற்றிருந்த போது ஊர்த்துவபாத முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்க முற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு...